ஓ இறைவா ! என் பெருமுயற்சியின் சிகரத்தை நான் எட்ட வேண்டும்.
என்னுள் இருக்கும் எந்த ஒரு பாகமும் அது உணர்வுள்ளதோ அல்லது உணர்வற்றதோ
தங்களின் புனிதத்திட்டத்திற்குச் சேவை செய்வதில் இருந்து விடுபட்டுத் தோல்வி அடையக்கூடாது.
அவ்வகையில் நான் உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது. பெருமிதமான பக்தியோடு நான் உங்களை இறைஞ்சுகிறேன்.
– ஸ்ரீ அன்னை