அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது.
ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகவே நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அவர் செய்யும் முதல் தவறு, மானிடர்களின் துன்பங்கள், ஏமாற்றங்கள், துயரங்கள் எல்லாவற்றுக்கும் இதுதான் ஆரம்ப காரணம்.
அன்பு செலுத்துவது என்றால், எந்த பேரமும் இன்றி தன்னையே தருவது; அப்படி இல்லையேல், அது அன்பு அல்ல. ஆனால் எவரும் இதைப்புரிந்து கொள்ளவில்லை. புரிந்துகொண்டால் தானே, அதன்படி நடந்துகொள்ள முடியும்? விளைவுகள் வேதனை அளிப்பதாகிவிட்டன.
– ஸ்ரீ அன்னை