வருகை தந்ததொரு வலியின் துடிப்பு பதறுமொறு தடயம் பதித்த(து) அன்றியும், தேடிக் களைத்துப் போன பழையதும் தேடிய(து) உறாது திருப்தி கொளாததும் ஆனதோர் அவாவினுக்(கு) இடமீந்(து) அகன்றது, அதனின் அகநிலைச் சிறப்புப் பண்பினைத் தேடிடும் ஒருவன் திக்கெலாம் திரிகையில் அவனாசைப் பொருளே அவனின் முன்னே சடலமாய்த் தடத்தில் கிடப்பது போன்று: அந்த வேதனைத் துடிப்பும் அதனின் மங்கி மறைந்து போன நினைவின் மூடிய விழிகளைத் திறக்க முனைந்தே, இல்லாப் பொலிவை எப்படியும் காணத் தனது சிரசைச் சற்றே உயர்த்தி, அம்புலி காணா அடிமனக் குகையினில் கலவரம் இலாது பொறுமை காத்தது.
– ஸ்ரீ அரவிந்தர்