எண்ணமோ உயிர்ப்போ ஏதும் இன்றி வடிவே இல்லா மந்த நிலையினில், உயிர்க்கூ(டு) ஒடுங்கிச் சூழல் உணர்விடம் ஓய்வுற்(று) ஒதுங்கி, வெறுமை பரவிய மாபெரும் வான்வெளிப் பக்கம் சாய்ந்தும், உயிர்த்துடிப்(பு) அற்ற வெறும்பாழ் உற்றும், சிந்தனை சேராக் கனவுகள் ஊடே மீண்டும் ஒருமுறை வீசப் பெற்று நிழற்படி வாக வீழ்ந்த நிலமகள்: அகத்தீ(டு) அற்ற அதலச் சுழலில் தன்னின் உள்ளுரு தனையே மறந்தும், உருத்துவந்(து) ஊட்டும் ஊழ்வினை தனதை எண்ணிப் பாரா இயல்பினள் ஆகவும், நிரந்தரமான சுதந்திர நிலையில், தன்னைத் தானே சுழற்றிக் கொண்டு வட்டா காரமாய் வலம்வந் தனளே.
– ஸ்ரீ அரவிந்தர்