கூர்ந்தாயக் கூடா இருளடர் பரப்பினில், அதன்பின், ஏதோவொன்(று) அதிர்வு கொண்டது, பெயரிடப் படாத இயக்கம் ஒன்றோ, எண்ணவே இராத இளங்கருத்(து) ஒன்றோ, விடாப்பிடி யுடனே வேண்டுகிற ஒன்றோ, மனநிறை (வு) இன்றியே மருகிடும் ஒன்றோ, செயல்நோக்(கு) இலாது செயற்படும் ஒன்றோ, இவற்றுள் அந்த ஏதோ ஒன்றுதான் விரும்பிய பொருளை உறும்வழி தெரியாதே ஒன்றும் அறியா நிலையை உசுப்பிட, மனஞ்சொலும் சான்றினை ஏற்றிட மறுத்திடும் மௌட்டியம் தன்னிடம் வம்பு செய்தது.
– ஸ்ரீ அரவிந்தர்