முதலில் தொடங்கி முடிவினில் முடியும் இன்மை என்னும் இயல்பின் இடையே எல்லை இல்லாத் தன்மை கொண்டு வீழ்ச்சி உற்ற ஆன்மா வினதோர் அரிய ஆற்றல் விழித்தெழுந் ததுவே, உருதான் எடுத்த இருட் கருவறையை ஒருமுறை மீட்டும் ஓர்ந்து பார்த்தே, பதிலிலாப் புதிராம் பிறப்பின் பண்பும் கதியிலே இறப்பின் மந்த நிலையும் ஏற்றிடும் வகையில் இலையெனத் திரும்பி, இன்மை வெளியினில் தன்னுடை இலக்காம் இறுதியை எட்டிட ஏங்கலா யிற்று.
– ஸ்ரீ அரவிந்தர்