மானிட மனத்தின் துள்ளலில் தோன்றும் அயர்வினை அகற்றும் கூக்குரல் ஒன்றுடன் மாறி மாறி வந்திடும் அதனின் ஆர்வம் மிக்கதோர் அசைவு நாட்டமும், சிறகடித்(து) உயரே பறந்திடும் அதனின் நேய வேட்கை மாயச் சாயலும் ஒத்திசை(வு) அற்றதோர் இன்னிசைச் சுரமென அவளின் அகத்தே வந்து சேர்ந்தவே.
காலச் செல்வன் காட்டிய கீற்றொளித் தகவல் அவளைச் சார்ந்ததாய் இலையே.