விழிமின் என்றிடும் வெண்கலக் குரலினால் விளிப்பாணை விடுத்த சுடர்மிகு தலைவனின் மயக்கும் இசையில் மேலீடாய் மலர்ந்த விதங்கள் விளைத்த வனப்பினில் வசப்பட, சிலவொரு தினமே நிலைக்கிற சுகந்தரும் அவரவர் உற்றுழி உவகைக் கூறினைக் கொண்டிட இசைந்தே கூடிட விரைந்த.
ஆதி இனத்தவர் அவர்களின் இடையே சாவித்ரி தானும் விழித்தெழுந் தனளே.