காலக் கெடுவுடை மானுடக் கண்களால் விண்ணவர்க்(கு) இயல்பாம் விஞ்சிய வனப்பினை உற்றிட விடுத்த உரிமைக் கோரல் அடியோ(டு) ஆங்கே மறுக்கப் பட்டது, மிளிரெழில் கொண்ட தேவியின் மேனியோ விண்ணகம் விட்டே வெளிச்செல நேர்ந்தது, உண்மையில் விளைந்த ஒருநிகழ்(வு) இதுவே மானிடப் பார்வையில் மர்மமாய் இருந்தது, அருமை மற்றும் அதிசய நிலைகள் அதற்கு மேலும் நிலைக்கா(து) அழிந்தன.
– ஸ்ரீ அரவிந்தர்