உடனிருந்(து) இயங்கிட ஒருவரும் இல்லாப் பெருமை பெற்றப் பெரிதோர் ஆற்றல் என்கிற ஒற்றை இறைவிளி ஆங்கே வான்வெளி நிலவும் அவிரொளி வழங்கும் அற்புதப் பொருளையும் அழகிய உருவையும் எங்கோ தொலைவில் உள்ளதோர் ஏதோ மறைகாப்(பு) உலகினுள் வாங்கிக் கொண்டது. மாளும் பண்புடை மானுடம் நமதை இதன்பின் தேவி நோக்கினள் இலையே.
– ஸ்ரீ அரவிந்தர்