அனைத்துயிர் நாளும் அவைதம் வினைகளில் வேறு படாதே விரைவுடன் இயங்கிட, மண்ணில் மற்றும் மரத்தில் வாழும் ஆயிர இனங்கள் ஆங்கெதிர் பாரா(து) அமைந்த வண்ணம் அவ்வப் போதில் தோன்றும் தூண்டலை ஏற்று நடக்கையில், உறுதி இல்லா உணர்வுடைத் தலைவனாம் மனிதன் மட்டும் வருங்கா லத்தின் மூடிய முகத்தை உற்றிவண் கண்டே உருத்துவந்(து) ஊட்டிய ஊழ்வினைச் சுமையைத் தலையில் தூக்கித் தாங்கல் ஆனான்.
– ஸ்ரீ அரவிந்தர்