எங்கள் தலைவர் பிரானின் அன்னமய அங்கியாய் இருந்த திருமேனியே, எங்களது முடிவற்ற நன்றியுணர்வை ஏற்றருள், எங்களுக்காக எத்தனையோ செய்த, எத்தனையோ உழைத்த, போராடிய, துன்பமேற்ற, நம்பிக்கைகள் வைத்திருந்த, எங்களுக்காக எத்தனை எத்தனையோ சகித்துக்கொண்ட பொன்னுடலே, எங்களுக்காக எல்லா சங்கற்பங்களும் செய்த, அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட, சகல ஆயத்தங்களும் செய்து வைத்த, எங்களுக்காகப் பற்பல சாதனைகள் முடித்த திவ்விய தேகமே, உன்முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்; உனக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை என்றும், ஒரு கணமும் நாங்கள் மறவாதிருக்கத் திருவருள் செய்.
– ஸ்ரீ அன்னை