நிச்சயமான வெற்றி கிட்டும். இதற்குப் பல நாள், பல ஆண்டுகள், பல காலம் ஆகும். எதிரியின் பலமும் நாளுக்கு நாள் கூடியவாறே இருக்கும்.
இந்தப் போர்க்காலத்தில் பதுங்கு குழியில் காவலிருக்கும் காவல்காரன் போல் உணர்வு சர்வ விழிப்புடன் இருக்க வேண்டும். அயர்வு சிறிதளவும் இல்லாமல் துணிந்து நிற்க வேண்டும். அச்சத்தின் சிறு இழையும் தலை காட்டக் கூடாது . அடையப் போகும் லட்சியத்தில் அசைக்கவொண்ணா நம்பிக்கை இருக்க வேண்டும். உனக்கு ஊக்கமும் ஊட்டமும் அளித்து வரும் உயர் சக்தியின் பால் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். உறுதியோடு முயன்று உழைக்கும் தீரனுக்கு வெற்றி நிச்சயம்.
– ஸ்ரீ அரவிந்தர்