யோகம் செய்வதற்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒன்று இறந்த காலத்தின் மீதுள்ள பற்றுதலை ஒழித்தல். இறந்த காலம் இறந்ததாகவே இருக்கட்டும். நீ அடைய வேண்டிய முன்னேற்றத்திலும், இறைவனுக்கு சரணாகதி செய்வதிலுமே கவனம் செலுத்து.
என்னுடைய ஆசீர்வாதமும் உதவியும் உனக்கு எப்போதும் உண்டு. பழைய பழக்கங்களையும், நம்பிக்கைகளையும் நாம் விடாதவரை எதிர்காலத்தை நோக்கி விரைவாக முன்னேறுவதற்கு அதிக நம்பிக்கை இல்லை.
இறந்த காலத்தின் அலைகள் எல்லா பற்றுதல்களையும், பலவீனங்களையும் அள்ளிக்கொண்டு உன்னிலிருந்து வெகுதொலைவிற்கு அப்பால் பாய்ந்து போய் விடட்டும்.
அவற்றின் இடத்தை எடுத்துக் கொள்ள இறை உணர்வின் ஒளிபொருந்திய மகிழ்ச்சி தயாராகக் காத்திருக்கிறது.
கடந்த காலத்தை மறந்துவிடு. நித்தியப்பொருள் மீது மட்டுமே ஒருமுனைப்படு.
ஆசிகள்.
– ஸ்ரீ அன்னை