விளங்கிட ஒண்ணாப் புதிரின் விளிம்பில் மங்கி மறையும் கணத்தின் முனையை ஒட்டியே ஒளிர்ந்து வெளிறிய நிறத்துடன் மயக்கும் வண்ணம் அலையுமோர் ஒளிக்கரம், வண்ணம் பலவாய் மாறிடும் பால்நுரை நிறமணிக் கல்லிவே நேர்த்தியாய்க் கீல்செயப் பொன்னிலே கேடகம் பொருத்தி வைத்ததொரு
கதவ வாயில், பொதிந்துள கனவுகள் தெரிந்திடும் வகைசெய, மெல்லத் திறந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்