திருவுரு மாற்றத் தொடுகை சேர்த்த உணர்வுச் சிலிர்ப்போ தொடர்ந்திருந்(து) உலவிச் செயற்பண்(பு) இலாததும் செறிந்து கறுத்ததும் ஆனதோர் அமைதிப் பண்பினை அணுகிக் காரணம் காட்டி நம்பிட வைக்கவே, வளப்பும் விந்தையும் வாகாய்க் கூடிக் கடவுளின் களங்களைக் கலக்க லானது.
– ஸ்ரீ அரவிந்தர்