வியத்தகு வியப்பினை விளைத்திடும் விதமாய்த் தீரச் செயலைப் புரியத் திரியும் சாதனை யாளன் தங்கிடம் இன்றி, அநாதை ஆக்கி விடப்பெற்ற நிலையிலே, உறையுளைத் தேடிப் பிறிதோர் உலகினில் கலக்கமும் துணிச்சலும் கலந்த உணர்வுடன் உள்ளார் உந்துணர்(வு) உற்ற நயத்துடன் அணுகி ஆதா(வு) இறைஞ்சினாற் போன்று தொலைவிடத்(து) உடையொரு
சொர்க்க முடுக்கினுள் தெய்வச் செயல்திகழ் உணர்ச்சிக் குறிப்புடன் மந்தமாய் ஒருவகை வேண்டுகோள் வந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்