விலங்குநிலையிலுள்ள நமது பரிணாமம் இது வரை வெற்றிகொள்ளாத களங்களில் நமக்கெனக் காத்திருக்கும் வரம்பற்ற உவகைகள், பூரண சக்திகள், சுயமாய்த் திகழும் அறிவின் ஒளிவீசும் பரப்புகள், நம் ஜீவனின் அகன்ற அமைதிநிலைகள் ஆகியவற் றின் கணநேர அனுபவம் மனிதருக்குக் கிடைத்தா லும் போதும், அவர் பிறிதனைத்தையும் துறப்பர். இப்பெரும் வளங்களைப் பெறும்வரை ஓயமாட்டார். ஆனால் அதற்கான பாதையோ குறுகியது, வாயில் களோ வலிந்து திறத்தற்கு அரியவை; அதுமட்டு மன்று, சாதாரணப் பரப்புகளிலிருந்து திரும்பி, அவ்வுயர்நிலைகளை நோக்கி நடையிடாதவாறு நம் கால்களைப் பிணிக்கும் அச்சம், ஐயம், அவநம் பிக்கை என்னும் இயற்கையின் தளைகளும் உள்ளன.
– ஸ்ரீ அரவிந்தர்