அவள(து) மெய்ம்மை அடைந்த உயர்த்திக்(கு) அவளும் இணையாய் வளர்ந்திருந் தனளே, மீபெரும் அமைதிக் களங்களின் மேதைமை அதனின் அகன்று பரவிய தனிமையில் ஆன்மா முழுதையும் அளாவி நனைத்தும், வேடம் களைந்த அவளின் மெய்யுரு உள்ளார் தன்மையை உணர்ந்திட வைத்தும் கூடிய சூழலில் கொண்டணைத்(து) இருந்ததே.
– ஸ்ரீ அரவிந்தர்