புவியைச் சுற்றி சூரியன் சுழல்கிறது என்பது புலன்களைப் பொறுத்தவரை எப்போதும் மெய்மை யாகும்; பகுத்தறிவுக்கோ அது பொய்மையாகும். சூரி யனைச் சுற்றி புவி சுழல்கிறது என்பது பகுத்தறிவுக்கு எப்போதும் மெய்மையாகும்; பரம்பொருளின் பார்வை யிலோ அதுவும் பொய்மையாகும். புவியும் அசைவ தில்லை. சூரியனும் அசைவதில்லை; புவியுணர் வுக்கும் சூரிய உணர்வுக்கும் இடையேயான தொடர் பில் ஏற்படும் மாற்றம் மட்டுமே உண்டு.
– ஸ்ரீ அரவிந்தர்