அகத்தே நேரடியாகக் காண்பதாகிய திருஷ்டி, அகத்தே நேரடியாகக் கேட்பதாகிய சுருதி, ஞான ஒளிவிளக்கத்தால் நினைவுகூர்வதாகிய ஸ்மிருதி ஆகியவற்றால் மெய்மையை உணர்வதையே தெய் விக வெளிப்பாடு என்கிறோம். இதுவே மிகவுயர்ந்த அனுபவமாகும்; இந்த அனுபவம் தகுதியுடையோ ரால் எப்போதும் மீண்டும் மீண்டும் எய்தப்படக் கூடியதாகும். சாத்திர வாக்கு பரம அதிகாரம் உடையதாகக் கருதப்படுவது, அதைக் கடவுள் அரு ளினார் என்பதனால் அன்று, ஆன்மா அதனைக் கண்டுணர்ந்தது என்பதனால்தான்.
– ஸ்ரீ அரவிந்தர்