உன் அருகில் இருப்போரினுள் உறையும் கட வுளுக்கெனவும், உன்னுள் இருக்கும் கடவுளுக்கென வும், உன் நாட்டிலும் உன் பகைவனின் நாட்டிலும் உறையும் கடவுளுக்கெனவும், மனிதகுலத்தில் உள்ள கடவுளுக்கெனவும், மரத்திலும் கல்லிலும் விலங்கி லும் இருக்கும் கடவுளுக்கெனவும், இவ்வுலகினுள் ளும் உலகிற்கு அப்பாலும் உள்ள கடவுளுக்கெனவும் வாழ்; அப்போதுதான் நீ முக்தியை அடையும் நேர் வழியிற் செல்கிறாய்.