விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் ஆற்றலே சுதந்திரத்திற்கான அடிப்படையாகும். எனவே பெரும்பாலான ஒழுக்கமுறைகளில், ஆன்மா தன்னுடைய கீழ்ப் பாகங்களில் விதிகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றிய பின்னர்தான் அது தன் தெய்விக நிலையின் பூரண சுதந்திரத்திற்கு எழு வது சாத்தியமாகிறது. சுதந்திரத்தோடு தொடங்கும் ஒழுக்கமுறைகள், இயல்பாகவே சுதந்திரமாக இருக் கின்ற, அல்லது முந்தைய பிறப்புகளில் தமது சுதந்தி ரத்தை ஏற்கனவே நிலைநாட்டிக்கொண்டுள்ள மகான்களுக்கே உரியவையாகும்.