பிராண ஆசையின் தன்மையை நீ சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதை நுகர நுகர பிராண ஆசை வளரும், அது திருப்தியடைந்து விடாது. உன்னுடைய ஆசையை நிறைவேற்றினால் அது மேலும் மேலும் வளரத் தொடங்கும். இன்னும் அதிகம் வேண்டுமென்று கேட்கும். அதை நாங்கள் சாதகர்கள் விஷயத்தில் பல தடவைகள் பார்த்திருக்கிறோம். ஆசையைப்பற்றி எல்லாக் காலத்திலும் தெரிந்திருந்ததையே அது உறுதிப்படுத்துகிறது. ஆசையையும் பொறாமையையும் உணர்விலிருந்து வெளியே எறிந்துவிட வேண்டும் – அவை விஷயத்தில் அது ஒன்றே செய்யத்தக்கது.
-ஸ்ரீ அரவிந்தர்