ஆசைகளை முற்றிலுமாக உடனடியாக விட்டொழிப்பது கடினம் – சரியான ஆசைகள் மேலோங்கி நின்றால் அதுவே இறுதி வெற்றிக்கு உறுதியளிப்பதாகும், ஆகவே அதற்காக தொல்லைப்படாதே. இவையெல்லாம் படிப்படியாகவே நடக்கும் – முன்னேற்றம் தொடங்கிவிட்டால் சாதனையின் விளைவுபற்றிய அடிப்படையான நிச்சயமும், செய்யப்பட வேண்டியவை பற்றிய ஓர் அமைதியான பார்வையும் இருக்க முடியும்.
– ஸ்ரீ அரவிந்தர்