இறுதியாக நீயே ஈஸ்வரனாக இருப்பதை உணர்ந்து கொள்; ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே; இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள்.உனது ஆற்றலில் அந்த ஈசுவரனுக்கு அடி பணிந்திரு. அந்த ஒருவனுக்கே ஆளாகு. உனது ஆனந்தக் களிப்பில் அவனோடு கட்டுண்டிரு. உனது பிராணனில், உடலில், மனதில் எல்லாம் அந்தப் பரமனே நிறைந்திருக்குமாறு செய்.
– ஸ்ரீ அரவிந்தர்