நீ இப்போதுள்ள நிலையில் உனக்குத் திருப்தி இல்லை எனில் இறைவனிடம் இருந்து உதவியைப் பெற்று உனக்கு அனுகூலம் ஆக்கிக்கொள்; உன்னை மாற்றிக் கொள். உன்னை மாற்றிக் கொள்ளும் தைரியம் உனக்கு இல்லையெனில் விதியிடம் உன்னை ஒப்படைத்துவிட்டு அமைதியாக இரு. மாற்றத்திற்காக எதையும் செய்யாமல் உன் நிலை பற்றி ஓயாமல் குறை சொல்வது காலத்தையும் சக்தியையும் விரயமாக்கும். ஆசைகள் மீதும் சவுகரியங்கள் மீதும் தன்முனைப்போடு கவனம் செலுத்துவது மறைந்தால் இடையூறுகள் தாமே மறைந்துவிடும்.
– ஸ்ரீ அன்னை