இந்தப் பொழுதிலும் இன்னல் உற்றுப் போரா டியதே அவளது புற்கலன்; ஏற்ற அவளின் மானிட இயல்பும் பாதி இறைமைப் பாங்காய் இருந்தது: அனைவரில் இருக்கும் புனித ஆன்மா அவளின் அகத்துரு வாகத் தெரிந்தது, இயற்கை ஆற்றல் […]
எனிது எனிலோ, இயற்கை அன்னை தன்னின் வல்லமைத் தடத்தில் நடக்கையில் உயிர்ப்பொருள் ஒன்றின் உரத்தை முறிக்கிறாள், ஆன்மா ஒன்றின் ஆக்கம் தகர்க்கிறாள், ஆயினும் அதற்கெலாம் கவலை கொளாதே அழிந்து பட்டவை அவணே தங்கியும் பாதிப்(பு) இன்றிப் […]
பலநாள் முன்னர் அறியப் பட்டதும் ஊழ்வழி வகுத்ததால் உற்றதும் ஆகிய புலரும் இந்தக் காலைப் பொழுதோ நாளும் தெரிகிற நண்பகல் போன்று மற்றொரு பகலைக் கொணர்ந்து வந்ததே – ஸ்ரீ அரவிந்தர்
தன்னுடன் பிறந்த இன்னல ஆக்கம் அதனிடம் இருந்தே அகற்றப் பெற்றும், வானகம் சாரா வாழ்வின் புதிராம் அடரிருள் உடுப்பினை அணிந்தவள் ஆகியும், அன்பவன் காட்டிய அனைவரின் கட்புலப் பார்வையில் கூடப் படாதே பதுங்கியும், நிலவுல கினிலே […]