தன்னுடன் பிறந்த இன்னல ஆக்கம் அதனிடம் இருந்தே அகற்றப் பெற்றும், வானகம் சாரா வாழ்வின் புதிராம் அடரிருள் உடுப்பினை அணிந்தவள் ஆகியும், அன்பவன் காட்டிய அனைவரின் கட்புலப் பார்வையில் கூடப் படாதே பதுங்கியும், நிலவுல கினிலே இவ்விதம் நிலவும் உருத்துவந்(து) ஊட்டும் ஊழ்வினை என்கிற அண்ணியின் கண்ணே சிக்கினள் ஆகியும், அத சோதனைக்(கு) ஆட்படும் வேளை எப்போ(து) என்றே எதிர்பார்த் தளைாய், மற்றைய வானவர் தம்மினும் உயர்ந்தனாய் மானிடர்க் கான வன்விதி யினுக்காய்க் கட்டுப் பட்டுக் காத்திருந் தனளே.
– ஸ்ரீ அரவிந்தர்