எங்கனும் விரிந்த இயற்கையின் ஆற்றல் இயைத்திடும் களிப்பை என்றோ ஒருநாள் அவளுள் பெறவே இருந்தாள், ஆயினும் அதனின் அளப்பரும் சிறப்புடைப் பொன்னிறத் தோற்றப் பொலிவுடை ஒளியோ என்றும் இலங்கிட இயலா(து) ஆனது, நொறுங்குறும் இந்த நொய்ம்மை […]
அழியும் தன்மைய யாவும் ஆங்கே அமரரை வென்றிடும் அவலம் நிலவிட, சின்னாள் வாழ்ந்து தேய்கிற மானிட வார்ப்படம் ஆகிய வானவர் படுகிற கடுந்துயர் அவளுளும் கவிந்து கொண்டது.
அனைத்துயிர் நாளும் அவைதம் வினைகளில் வேறு படாதே விரைவுடன் இயங்கிட, மண்ணில் மற்றும் மரத்தில் வாழும் ஆயிர இனங்கள் ஆங்கெதிர் பாரா(து) அமைந்த வண்ணம் அவ்வப் போதில் தோன்றும் தூண்டலை ஏற்று நடக்கையில், உறுதி இல்லா […]