எங்கனும் விரிந்த இயற்கையின் ஆற்றல் இயைத்திடும் களிப்பை என்றோ ஒருநாள் அவளுள் பெறவே இருந்தாள், ஆயினும் அதனின் அளப்பரும் சிறப்புடைப் பொன்னிறத் தோற்றப் பொலிவுடை ஒளியோ என்றும் இலங்கிட இயலா(து) ஆனது, நொறுங்குறும் இந்த நொய்ம்மை நிலனில் எழுந்து நிமிரவும் ஏலா(து) ஆனதே.
நொய்ம்மை = தளர்வு, எளிதில் நொறுங்கும் தன்மை