இரவிலே மோதிடும் அரக்கர் வடிவுடை மல்லரைப் போன்றராம் தொன்மை வாதிகள் நிலமும் நேசமும் தண்டனைத் தீர்ப்புமாய் வட்ட வடிவிலே சூழ்ந்த வண்ணம் அனைவரும் அவளிடம் திரும்பி வந்தனர், மனம்சொலும் சான்றினை ஏற்க மறுத்திடும் இயப்பரும் கொடிய […]
உயர்ந்த உள்ளுரம் உறையும் இருப்பிடம் நயனம் காணா நகர்வை உணர்ந்திட, உடனடி யாக ஒளியால் பொலிந்தவை எல்லாம் வாழ்வின் இருளறை ஆகின; நினைவுத் திறத்தின் நிலைச்சா ளரங்களோ. – ஸ்ரீ அரவிந்தர்
நெடிதாய்த் தன்னின் நீள்சிற(கு) அடிக்கிற ஆற்றல் வாய்ந்த அவளின் ஆன்மா, அவளின் புற்கலத்(து) அரவம் இன்றி அழைப்பு விடுத்த ஆணையி னாலே, செறிதுயில் என்னும் திரைகடல் கொண்ட அலையின் எழுச்சியை அடக்குதல் ஊடே, நொதுமல் தன்மைய […]
வருத்தம் இவணெதும் திரும்பி வராதும், இன்னற்(கு) உரிய செய்தி என்கிற வாளால் பிளவினை உற்றிடா வண்ணமும் இருபெரு வெற்பின் இடையாழ்(வு) எனும்படி இருநிலை மனச்சான்(று) என்கிற ஆட்சிகளின் எல்லைகள் இடையுள ஆழம் மிக்கதோர் அமைதிப் பிளவில் […]
மண்ணில் வந்த நோக்கம் தனையவள் எண்ணம் என்றும் பதித்தாள் ஆதலின் ஒத்திணை(வு)அற்றே ஒதுங்கி வாழ்ந்தாள், உலகம் அளாவிய உணர்வில் கனிந்தவள் உளத்தால் உலகோர்க்(கு) உறவாய்ப் பொலிந்தாள், எவரும் பாகம் ஏற்கா(து) இருக்கவே தன்னந் தனியே தான்முன் […]