கனிவுடன் பாசம் காட்டும் பலப்பல முகங்களின் இடையே முற்றும் தனியளாய், எதனைக் குறித்தும் ஏதும் அறியா(து) இதஞ்சூழ் நெஞ்சினர் இடையுள(து) அறிந்தளாய், மனித வாடையே அற்றுக் கிடந்த தனித்த தரிசுக் காட்டு வனப்பினில், வருமென முன்னரே […]
அருளிடும் இறைவனை மனிதன் அருகினில் ஈர்த்திடும் வேளையில் இயற்கை முறையுடன் இசைந்தடங் காதவோர் இருட்டு வரம்பிலா விதத்தே அவன்மேல் வீழு கின்றது. இயற்கைச் சத்தியின் எல்லா ஆற்றலும் அந்த வேளையில் அயர்ந்து தளர்வுறும், அவனைத் தடுத்தாண்(டு) […]
நிகழும் என்றொரு நேரம் நம்பிய, கனவினில் கண்டே உணர்ந்து பார்த்த, நனவினில் நேராய் நடந்திடக் கண்ட(து) ஆகிய அனைத்தும் அவளது நினைவின் வான்முக(டு) ஊடே வாகாய் அவளைக் கழுகுச் சிறகுகள் வீசிக் கடந்தவே. – ஸ்ரீ […]
அவளின் அந்நாள் குழந்தைப் பருவச் சிறப்பு வாய்ந்த தினங்கள் சுட்டும் பிறந்த மண்ணின் பெருமை முதலாய், வட்டமிட்(டு) உயரும் வாலைக் கால நீல மலைகள் திரப்பிய உணர்வையும், சொர்க்கம் ஒப்பவாம் சோலைகள் தமையும், அன்புச் செய்தியை […]