அவளின் அந்நாள் குழந்தைப் பருவச் சிறப்பு வாய்ந்த தினங்கள் சுட்டும் பிறந்த மண்ணின் பெருமை முதலாய், வட்டமிட்(டு) உயரும் வாலைக் கால நீல மலைகள் திரப்பிய உணர்வையும், சொர்க்கம் ஒப்பவாம் சோலைகள் தமையும், அன்புச் செய்தியை ஆடும் மயில்தான் விளம்பிட விரித்த பீலிகள் தமையும், இன்ப உலகும் துன்ப உலகும் ஒன்றினை ஒன்று முந்திட முனைந்தே ஓட்டப் பந்தயம் வைத்தே ஓடிக் கடைசிக் கட்டத் திருப்பு முனையில், தவழும் சாயையின் கீழே இறுதித் தீர்ப்பினை இறுகப் பிடிக்கும் அகமகிழ்க் களிப்பின் அண்மை வரையிலும் வண்ணம் பலவகை கொண்ட வண்ணமாய் ஒளிநிறம் ஏற்றே உருத்தெழும் துடிப்புடன் அகத்தெழு புலரியின் அகல்விரி வினிலே அரச பாட்டையில் அன்றியும் இன்னலம் வாய்ந்த வழிக்கிளை யாவும் சேர்த்துக் கதிரொளித் தெளிவாய்க் காட்டும் பதிவென வரைந்த நிலப்படம் வகுத்தமைந் ததுவே.
– ஸ்ரீ அரவிந்தர்