கனிவுடன் பாசம் காட்டும் பலப்பல முகங்களின் இடையே முற்றும் தனியளாய், எதனைக் குறித்தும் ஏதும் அறியா(து) இதஞ்சூழ் நெஞ்சினர் இடையுள(து) அறிந்தளாய், மனித வாடையே அற்றுக் கிடந்த தனித்த தரிசுக் காட்டு வனப்பினில், வருமென முன்னரே வழிபார்த்(து) இருக்கும் வல்லமை வாய்த்ததோர் காலடி ஓசையை மடுத்துச் செவியிலே வாங்கிய வண்ணம் குறித்த வேளையைக் கூர்ந்து நுணுகிக் கவனித்(து) இருந்தனள், கவசக் காப்புடன்.
– ஸ்ரீ அரவிந்தர்