மண்ணகப் பற்றினை மனதிலும் நினையா வானார் குன்றுகள் வாகாய் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து துடிப்பாய் நின்றும். அகன்ற ஆழச் சிந்தனை கொண்டே பசுந்தழை விரித்துப் படர்ந்துதான் அடர்ந்துள அடர்கான் பகுதி அறிவிப்(பு) உரைக்கவும், முகத்திரை அணிந்துவாய் முணுமுணுப்(பு) ஓயா(து) ஒலித்ததே மந்திர வாசகம்.
– ஸ்ரீ அரவிந்தர்