அரவம் அற்றதும் அச்சம் தருவதும் ஆனதோர் அமைதிப் பந்தயக் களத்தில், எந்த உலகுக்(கு) எழுந்துநின் றாளோ,
அந்த உலகம் அறியா(து) இருந்திடும் வண்ணமாய் வந்தாள், போரிடும் பொருட்டே, தன்னுளே வதியும் அருந்திறம் தவிர உதவியாள் ஒருவரும் அவளுக்(கு) இலையே, மண்ணகம் சார்ந்த கண்ணகம் ஆங்கிலை, இறையவர் யாவரும் மேலே உலவியும் இயற்சத்தி முழுதும் கீழ்தவழ்ந்(து) இருந்தும் வல்லமை மிக்கதோர் வாதப் போரினைப் பார்த்து ரசிக்கும் பார்வையர் ஆயினர்.
– ஸ்ரீ அரவிந்தர்