என் அன்புக் குழந்தாய்,
நீ எதைக் கண்டும் பயங்கொள்ளலாகாது .
இதுதான் திருவுருமாற்றத்திற்கான முதல் பாடம். எனவே ஒவ்வொருவரும்
பயத்தை வெற்றி கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
நீ பயப்படும்பொழுது உடனடியாக இறைவனிடம் தஞ்சம் அடைய வேண்டும்.
எல்லாப் பொருள்களும் வசீகரமாகவும்
அழகாகவும் இருப்பதைக் காணலாம்.
ஏனென்றால் உண்மையில் ஒவ்வொன்றும்
இறைவனே. பயங்கொள்வதற்கு எதுவுமில்லை.
ஒரு முறை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு பெரிய மரத்தனடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். ஒரு பெரிய நாகப் பாம்பு அங்கு வந்து அவருடைய மணிக்கட்டில் கடித்து விட்டது.
இராமகிருஷ்ணர் விழித்துக்கொண்டு
அந்த பாம்பைப் பார்த்து “ஓ, காளி
அன்னையே, ஏன் என்னைக் கடித்தாய்? என வினவினார். உடனே இராமகிருஷ்ணர் குணமடைந்து விட்டார்.
அதற்காகத் தான் இச்சிறு நிகழ்வை
உனக்குக் கூறுகிறேன்.
நீ எதற்காகவும் பயங்கொள்ளலாகாது .
– ஸ்ரீ அன்னை