தத்துவம் தாண்டிய நிலைகளி னின்றும், மயக்கும் வனப்புடன், புலப்படாப் புகழுறு வானவில் வண்ணம் காட்டிய வண்ணம் அதுவரை தெரியா அமரக் கலங்கரை விளக்கம் விடுத்த தகவல் எனவே படைக்கும் தொழிலின் பதறிடும் விளிம்பிலே வைகறை வந்தனள் […]
சூரியர் தம்மின் ஓரிழை கூட முதலில் உட்புக முடியா(து) இருந்த வெற்பிடைச் சிறுதுளை அந்த வேளையில் அருளுடை மொழியுடன் ஆர்வக் கனலை வழிந்தோட வைத்தது நீர்க்கால் போலே. – ஸ்ரீ அரவிந்தர்
சாய்நிலை இருக்கையில் ஓய்வுறும் தெய்வம் அணித்தமேல் அங்கி நழுவிய(து) ஒப்பத் தொடர்ந்திருப் பதிலே தோல்வி கண்ட இரவுப் பொழுதும் தழுவிப் போனது. – ஸ்ரீ அரவிந்தர்