தேவரைவிட அசுரர் வல்லவர். ஏனெனில் அவர் இறைவனுடைய கடுஞ்சீற்றத்தையும் பகைமை யையும் எதிர்கொண்டு அச்சுமையைத் தாங்கிநிற்க இறைவனிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்; தேவரோ. இறைவனின் இன்பச் சுமையாகிய இறையன்பையும் அருள்மிகு பரவசத்தையும் மட்டுமே ஏற்க வல்லவர். – […]
இயற்கையுடன் இசைவுற்று வாழ்’ என்கிறது மேனாட்டுக் கோட்பாடு. எந்த இயற்கையுடன், உட லின் இயற்கையுடனா, உடலுக்கு அப்பாற்பட்ட இயற்கையுடனா? முதலில் இதை நாம் முடிவுசெய்ய வேண்டும். – ஸ்ரீ அரவிந்தர்
சிறிதும் மாறாத இயற்கைவிதியும்கூட, இயற் தலைவனாகிய இறைவன் உருவமைத்துத் தொடர்ந்து பயன்படுத்தும் திட்டவட்டமான ஒரு வழி முறையேயன்றி வேறில்லை. அது ஆத்மனால் படைக்கப்பட்டதாகும், அதற்கு அப்பால் செல்வது ஆத் மனுக்கு இயலும். ஆனால் முதலில் நாம் […]
செயலின்மையை விரும்புவது பேதமை, செய் லின்மையை வெறுப்பதும் பேதமையே; செய லின்மை என்பது இல்லாதவொன்றாகும். மணலில் அசைவற்றுக் கிடக்கின்ற, நாம் அசட்டையாக உதைத்தெறிகின்ற ஒரு சிறு கல்லும் இப்புவியின் மீது தன் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டே இருந்துள்ளது. […]
நீ மலையுச்சியில் தனித்து அசைவற்று மௌன மாக அமர்ந்திருக்கும் அதேசமயத்தில், நீ வழிநடத்தும் புரட்சிகளை உன்னால் காணமுடிந்தால், நீ தோற் றங்களிலிருந்து விடுபட்டவனாவாய். தெய்விகப் பார்வை பெற்றவனாவாய். – ஸ்ரீ அரவிந்தர்
நீ மகத்தான செயல்களையாற்றிப் பெரும் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கும்போ தும், நீ நீயாகவே எதையும் செய்யவில்லை என்பதை உன்னால் காணமுடிந்தால், இறைவன் உன் கண் களை மூடியிருந்த திரையை அகற்றிவிட்டான் என் பதை நீ புரிந்துகொள்ளலாம்.
தனிமையை விரும்புவது அறிவை நாடுவதன் அறிகுறியாகும்; ஆனால் பெருந்திரளிலும் போர்க் களத்திலும் கடைவீதியிலும் நாம் தொடர்ந்து தனிமையை உணரும்போதுதான் அறிவை அடைந்த வராவோம். – ஸ்ரீ அரவிந்தர்
பொருட்களின் தொடக்கமென்றும் முடிவென் றும் நாம் கூறுவது, நம் அனுபவத்தின் நடைமுறைப் பழக்கத்தைச் சார்ந்த சொற்களேயாகும். உண்மை யில் இச்சொற்களுக்கு மெய்யான இருப்பு ஏதும் கிடையாது, தொடக்கமென்பதும் முடிவென்பதும் ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்