அருகே அணுகத் துணிதற்(கு) அரிதாய் எதையும் விரும்பா இரக்கம் அற்றதோர் அடரிருள் அரக்கனின் கருமையி னூடே, நம்பிக்கை ஒன்று நன்கு துணிந்து பதுங்கிப் பதுங்கிக் கள்ளமாய் ஊர்ந்தது. – ஸ்ரீ அரவிந்தர்
ஓசை எழுப்பினும் உணரப் பெறாத வெறுமை விதையாம் சிந்தனை ஒன்றை விளையும் பயிரென விதைத்திட்ட வேளை, இருள்சூழ் ஆழத்(து) இடுக்கண் நடுவே உணர்வுக் கூறொன்(று) உதித்திட்ட வேளை நெடுநாள் முன்னுயிர் நீத்துச் சென்ற ஆன்மா ஒன்றினுக்(கு) உயிர்த்துடிப்(பு) […]
ஏதோவோர் இடத்தில் புலப்படா வகையொரு சிறுதுளை இடைவழி தெரிய லாயிற்று: பாலைவனமாய்ப் பாதிப்(பு) உற்ற நெஞ்சம் ஒன்றை நேரிலா தொருநகை நயமாய் நெருங்கி மயக்கினாற் போன்று, நீள்வழி காட்டும் நிறத்தொரு தனியிழை தயங்கிய வண்ணம் உயிர்ப்பொருள் […]