வரம்பிலாத் தன்மையின் மறுபுறத் திருந்தே ஊமை ஆழ்தடத்(து) ஊடகம் துளைத்தொரு தெய்வக் கண்ணோக்கு தேடி வந்தது, அண்டத்(து) அளப்பரும் ஓய்வின் இடையே, இயப்பரும் களைப்பினில் இளைத்துப் போன அகிலம் தன்னின் அதிமந்த நிலையிலே, மறந்து போன மளமகிழ்(வு) எதையும் எண்ணிப் பார்த்திட இயலவே முடியாமல், தனிமையில் தவித்தும் துணையே இலாதும், நிலையில் தடுமாறி நிலத்தே வீழ்ந்ததொரு மெய்ப்பொருள் தன்னைப் பார்த்திட விழைந்தே தினகரன் அனுப்பிய சிற்றிழைத் தூது வேவுப் பணிதனில் விரைந்தது தெரிந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்