ஓசை எழுப்பினும் உணரப் பெறாத வெறுமை விதையாம் சிந்தனை ஒன்றை விளையும் பயிரென விதைத்திட்ட வேளை, இருள்சூழ் ஆழத்(து) இடுக்கண் நடுவே உணர்வுக் கூறொன்(று) உதித்திட்ட வேளை நெடுநாள் முன்னுயிர் நீத்துச் சென்ற ஆன்மா ஒன்றினுக்(கு) உயிர்த்துடிப்(பு) அளித்து வாழ வைத்ததாய்க் கால தேவனின் அகத்துறு நினைப்பும் அதிர்வு கொண்டது. ஆயினும், அடியற்று வீழ உடன்வரும் மறதி என்கிற மாபா தகத்தால் கடந்த காலக் கல்வெட்டுக் குறிப்புகள் அடியோ(டு) அழிக்கப் பட்டுவிட் டதனால், சிதைந்த அனைத்துத் திரள்களை மீண்டும் வடிவமைத்(து) அமர்த்தும் வகைசெயல் வேண்டும், பட்டறிவுப் பெட்டகம் மீட்கப் பட்டு முனைப்போ(டு) உழைக்கும் முயற்சி வேண்டும்.
– ஸ்ரீ அரவிந்தர்