மறுப்பினைக் காட்டியும் மௌனம் காத்தும், வினையால் வந்திடும் விளைவைப் பற்றிய விழிப்புணர்(வு) இலாது மெத்தனம் கொண்ட அண்டமா அவளியை இடைமறித்(து) அவ்விழை: தகவல் ஏந்தித் தவழ்ந்த வண்ணம், விழிப்புடை உணர்வையும் விஞ்சிடும் மகிழ்வையும் செயல் வேட்டத்தில் சேர்த்துக் கொண்டு, இயற்கைத் தாயின் மயக்கம் தெளிந்த இதயம் நிலவிய எண்ணம் வென்றே, சேதியை அஃது தெளிவுடன் பார்க்கவும் உணரவும் ஒப்பிட வலிந்தே அதனின் புதுக்கிய முயற்சியைப் பொருந்தப் புரிந்தது.
– ஸ்ரீ அரவிந்தர்