ஸ்ரீ அன்னை

November 5, 2021
ஸ்ரீ அன்னை

ஜ்வாலை

பேரார்வத்தின் ஜ்வாலை மிகவும் நேரானதாகவும், மிகவும் தீவிரமானதாகவும் இருக்கவேண்டும். அப்போது எந்தத் தடையும் அதை ச்சிதைக்க  இயலாது. – ஸ்ரீ அன்னை
November 4, 2021
ஸ்ரீ அன்னை

தீர்மானம்

அமைதியான தீர்மானத்துடனும், அசைக்க முடியாத நிச்சயத்துடனும், நம்மை ஒன்று கூட்ட வேண்டும். – ஸ்ரீ அன்னை
November 3, 2021
ஸ்ரீ அன்னை

பலம்

மன ஒருநிலைப்பாட்டிலும், மோனத்திலும், முறையான செயலுக்குத் தேவையான பலத்தை நாம் சேகரிக்கவேண்டும். – ஸ்ரீ அன்னை
November 2, 2021
ஸ்ரீ அன்னை

பிரார்த்தனை

நம் இடையறாத பிரார்த்தனை இறைவனுடைய விருப்பத்தை அறிந்து கொண்டு அதன்படி வாழ்வதற்காகவே. – ஸ்ரீ அன்னை
November 1, 2021
ஸ்ரீ அன்னை

ஒளி

அவனது ஒளியின் மிகுதிக்காகவும், அவனை வெளிப்படுத்தும் திறனை நம்மில் விழிப்படையச் செய்யவும் இறைவனை அழைக்கிறோம். – ஸ்ரீ அன்னை
October 29, 2021
ஸ்ரீ அன்னை

உரையாடல்

இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? *நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன்.* அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? *முறை எப்போதும் […]
October 27, 2021
ஸ்ரீ அன்னை

அன்பு

அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது. ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி […]
October 26, 2021
ஸ்ரீ அன்னை

ஓ இறைவா !

ஓ இறைவா ! என் பெருமுயற்சியின் சிகரத்தை நான் எட்ட வேண்டும். என்னுள் இருக்கும் எந்த ஒரு பாகமும் அது உணர்வுள்ளதோ அல்லது உணர்வற்றதோ தங்களின் புனிதத்திட்டத்திற்குச் சேவை செய்வதில் இருந்து விடுபட்டுத் தோல்வி அடையக்கூடாது. […]
October 25, 2021
ஸ்ரீ அன்னை

அன்னையை அழைத்தல்

ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு. அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்: அன்னையே ! நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, பிராணனின் […]