ஸ்ரீ அரவிந்தர்

December 8, 2021
ஸ்ரீ அரவிந்தர்

செயலாற்று

கடவுள் அனைத்தையும் சங்கற்பித்துள்ளார். நடக்கவிருப்பதெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரது திருச்செயலை எதிர்நோக்கிச் செயலற்று உட்கார்ந்திருக்காதே. கடவுளுடைய திறமிகு தலையாய ஆற்றல்களுள் உனது செயலும் ஒன்றாகும். எனவே எழு , செயலாற்று. ஆனால் அகங்கார […]
December 6, 2021
ஸ்ரீ அரவிந்தர்

வேதனை

வேதனை என்பது, பேரின்பத்தைத் தாங்கி அதில் வளர நமக்குக் கற்பிக்கும் நம் அன்னையின் தீண்டுதலேயாகும். அவளது இக்கல்வியில் மூன்று கட்டங்கள் உண்டு: முதலாவதாக சகிப்புத்தன்மை, அடுத்து ஆன்மாவின் சமத்துவநிலை, இறுதியாக பரவசநிலை. – ஸ்ரீ அரவிந்தர்
December 5, 2021
ஸ்ரீ அரவிந்தர்

நம்பிக்கை

எங்கணும் இறைவனைக் காணுங்கள், தோற்றங்களைக் கண்டு அச்சமடையாதீர்கள். எல்லாத் தீமைகளுமே மெய்மை உருவாகிவரும் நிலையே, உண்மை வெளிப்படுவதற்கான முயற்சியே என்று நம்புங்கள். தோல்விகளனைத்தும் இறுதியில் பலன் தருபனவற்றின் மறைமுகத் தோற்றங்களே என்றும், பார்வைக்கு மறைந்துள்ள ஆற்றலே […]
December 3, 2021
ஸ்ரீ அரவிந்தர்

இலக்கு

பரமனின் நல்லதொரு பாத்திரம். இதுவே உனது பணி. உன் ஜீவனின் நோக்கமும் இதுவே: தெய்வீக அதிமனிதனாக நீ ஆக வேண்டும், அதற்காகவே நீ இங்கு உள்ளாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் அதற்காக உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வது […]
November 16, 2021
ஸ்ரீ அரவிந்தர்

ஆரோக்கியம்

இருபதாயிரம் முன்னெச்சரிக்கைகளால் காக்கப்படும் ஆரோக்கியமே நவீன மருத்துவன் நமக்கு அளிக்கும் சாத்திரமாகும். ஆனால் நம் உடலைக் காக்க வழங்கியுள்ள சாத்திரம் இதுவன்று, இயற்கை வழங்கியுள்ள சாத்திரமும் இதுவன்று. – ஸ்ரீ அரவிந்தர்
October 31, 2021
ஸ்ரீ அரவிந்தர்

சமர்ப்பணம்

சமர்ப்பணம் மனித செயலை தெய்வச் செயலாக்கும். – ஸ்ரீ அரவிந்தர்
October 30, 2021
ஸ்ரீ அரவிந்தர்

அச்சம்

நெருப்புக்கோ அல்லது பிற கொடுமையான சக்திகளுக்கோ கொள்ளும் அனைத்து அச்சமும், வெல்லப்பட வேண்டும் . ஏனென்றால், அச்சம் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது – இயற்கையின் மிகப் பெரிய சக்திகளுக்கு எதிரே கூட, சுதந்திரமான ஆன்மா அச்சமின்றி […]
October 28, 2021
ஸ்ரீ அரவிந்தர்

யோகம்

யோகத்தின் தொடக்கத்தில் ஒருவன் இறைவனை அடிக்கடி மறந்துவிடுவதுண்டு. ஆனால் தொடர்ந்து விழைவதால் இறைவனை நினைவில் வைத்திருப்பது அதிகரிக்கின்றது, மறப்பது குறைகிறது. ஆனால் இந்தத் தொடர்ந்த விழைவு, ஒரு வலுக்கட்டாயமாக, கண்டிப்பான ஒழுக்கப் பயிற்சியாக இருக்கக்கூடாது. அன்பும் மகிழ்வும் […]
October 23, 2021
ஸ்ரீ அரவிந்தர்

நிறைவு தரும் அன்பு

தெய்வத்திடமிருந்து வருவதை மேன்மேலும் ஏற்று, தெய்வத்துடன் ஒன்றியிருக்க முற்படும் வகையில், தெய்வத்தின்பால் செலுத்தப்படும் உணர்ச்சி, ஒருவித அன்பாகும். அத்தகைய உணர்ச்சி, தெய்வத்திடமிருந்து வருவதைப் பிறருக்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றிச் செலுத்தும் தன்மை உடையதாகும். அப்படிப்பட்ட உணர்ச்சியைப் […]