பரமனின் நல்லதொரு பாத்திரம்.
இதுவே உனது பணி. உன் ஜீவனின் நோக்கமும் இதுவே: தெய்வீக அதிமனிதனாக நீ ஆக வேண்டும், அதற்காகவே நீ இங்கு உள்ளாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் அதற்காக உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வது தான் , வழியிலே இன்பங்கள் உன்னை இழுக்கக் கூடும் இலக்கினின்றும் நீ வழுவக் கூடும், உன்னை ஆயத்தப்படுத்திக் கொள், இலக்கு இதுதான், நோக்கம் இதுதான், வழியில்சித்திகள் எதிர்ப்படும், இன்பங்களும் தான்: ஆனால் உன் இலக்கிலே இன்பம் காணுதல் உன் பெருங்களிப்பாகும், உன்ஜீவனின் பெருமை அதுவே. வழியிலே உன்னை ஈர்க்கும் இன்பமும் உன்னுடனே தான் உள்ளது, உனக்கு வல்லமையும் அளிக்கப்பட்டுள்ளது. உனது சிகரத்திற்கு ஏறும் வல்லமையும் உனக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உனக்கு ஒரு கடமை உண்டென்றால் இதுவே உன் கடமை; என் குறிக்கோள் என்னவென்று கேட்பாயா? இதுதான் உன் குறிக்கோள் இன்பம் வேண்டும் என்பாயா? இதைவிட வேறு இன்பம் என்ன இருக்கிறது? இதுவே பேரின்பம்,
மற்றவை எல்லாம் துண்டுபட்ட இன்பங்களே; கனவு காணும் இன்பம், உறங்கும் இன்பம், தன்னை மறக்கும் இன்பம் – இவையெல்லாம் குறுகியவை ஆனால் இந்தப் பேரின்பம் உன் ஜீவன் முழுவதையும் தழுவும் இன்பம், என் ஜீவன் எது என்று கேட்பாயா? அந்த பரம்பொருள் தான் உன் ஜீவன், மற்றவையெல்லாம் அவனுடைய கூறுபட்ட பிம்பங்ளே, சத்தியத்தை நீ நாடுகிறாயா? இதுதான் சத்தியம், உன்முன் அதனை நிறுத்திக்கொள்
அனைத்திலும் அதனைப்பொருத்து, என்றும் அதற்கு உண்மையாக இரு.
– ஸ்ரீ அரவிந்தர்