கடவுள் அனைத்தையும் சங்கற்பித்துள்ளார்.
நடக்கவிருப்பதெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரது திருச்செயலை எதிர்நோக்கிச்
செயலற்று உட்கார்ந்திருக்காதே.
கடவுளுடைய திறமிகு தலையாய
ஆற்றல்களுள் உனது செயலும் ஒன்றாகும்.
எனவே எழு , செயலாற்று.
ஆனால் அகங்கார உணர்வுடன் அல்ல .
இறைவனால் முன்பிருந்தே நிச்சயக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியின்
சந்தர்ப்பமாகவும் ,கருவியாகவும் ,
வெளிப்படையான காரணமாகவும் செயலாற்று.
– ஸ்ரீ அரவிந்தர்