எங்கணும் இறைவனைக் காணுங்கள், தோற்றங்களைக் கண்டு அச்சமடையாதீர்கள்.
எல்லாத் தீமைகளுமே மெய்மை உருவாகிவரும் நிலையே, உண்மை வெளிப்படுவதற்கான முயற்சியே என்று நம்புங்கள்.
தோல்விகளனைத்தும் இறுதியில் பலன் தருபனவற்றின் மறைமுகத் தோற்றங்களே என்றும், பார்வைக்கு மறைந்துள்ள ஆற்றலே பலவீனம் எனவும், வலிகளனைத்தும் பெரும் ஆனந்தம் ஒளிந்திருப்பதே எனவும் நம்புங்கள்; திடமாகவும், சோர்வில்லாமலும் நம்புங்கள்.
இவ்வாறு நம்புவீர்களேயானால் இறுதியில் நீங்கள் முழு மெய்மை, முழு ஆற்றல், முழு ஆனந்தத்தைக் கண்டு அனுபவிப்பீர்கள்.
ஸ்ரீ அரவிந்தர்.