ஸ்ரீ அரவிந்தர்

September 14, 2023

சிந்தனைப் பொறிகள்

புவியைச் சுற்றி சூரியன் சுழல்கிறது என்பது புலன்களைப் பொறுத்தவரை எப்போதும் மெய்மை யாகும்; பகுத்தறிவுக்கோ அது பொய்மையாகும். சூரி யனைச் சுற்றி புவி சுழல்கிறது என்பது பகுத்தறிவுக்கு எப்போதும் மெய்மையாகும்; பரம்பொருளின் பார்வை யிலோ அதுவும் […]
September 13, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் பார்வையில் அருகிலுள்ளது. தொலைவிலுள்ளது என்னும் வேறுபாடு இல்லை; தற்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என்பது இல்லை. இவையெல்லாம் அவனது உலக ஓவியத்தை நோக் குவதற்கு வசதியான நோக்குமுறைகனே. – ஸ்ரீ அரவிந்தர்
September 12, 2023

சிந்தனைப் பொறிகள்

சமயச் சிந்தனையிலும் அனுபவத்திலும் குறு கிய, கீழ்த்தரமான, மேல்வாரியான அனைத்தையும் விலக்கு, விரிந்தகன்ற வான விளிம்பையும்விட விரி வினை எய்து, மிகவுயர்ந்த மாமலையாம் கஞ்சஞ்சங் காவையும் விட உயர்ந்துநில், ஆழ்கடலையும்விட ஆழமுடையவனாக இரு. – ஸ்ரீ […]
September 11, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

சாத்திர வாக்கு எக்காலும் தவறாத தன்மையு டையது; உணர்ச்சிகளும் பகுத்தறிவும் சாத்திரத்துக் குப் பொருள்கொடுக்கும்போதுதான் பிழையேற்பட இடமுண்டு. – ஸ்ரீ அரவிந்தர்
September 10, 2023

சிந்தனைப் பொறிகள்

அகத்தே நேரடியாகக் காண்பதாகிய திருஷ்டி, அகத்தே நேரடியாகக் கேட்பதாகிய சுருதி, ஞான ஒளிவிளக்கத்தால் நினைவுகூர்வதாகிய ஸ்மிருதி ஆகியவற்றால் மெய்மையை உணர்வதையே தெய் விக வெளிப்பாடு என்கிறோம். இதுவே மிகவுயர்ந்த அனுபவமாகும்; இந்த அனுபவம் தகுதியுடையோ ரால் […]
August 20, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

நீ உன்னுடைய ஆன்ம அனுபவத்தை மட்டும் வலியுறுத்தி, பிறரது வேறுபட்ட ஆன்ம அனும் வத்தை மறுக்கும்போது, இறைவன் உன்னை ஏமாளி . யாக்குகிறான் என்பதை நீ புரிந்துகொள்ளலாம். உன் ஆன்மாவின் திரைகளுக்குப் பின்னிருந்து எழும் அவனுடைய […]
August 19, 2023

சிந்தனைப் பொறிகள்

தான் அன்புசெய்யும் பொருட்டு இவ்வுலகை உருவாக்கினாள், கொடுமை. கொடுமையை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது அன்பும் ஒழிந்து போகும். கொடுமையை ஒழிக்க உன்னால் முடியாது. ஆனால் அதை அதன் எதிரிடையாகிய தீவிர அன் பாகவும் ஆனந்தமாகவும் […]
August 18, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

தான் வாழும்பொருட்டு இவ்வுலகை உருவாக் கினான். மரணத் தேவன். மரணத்தை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது வாழ்வும் ஒழிந்து போகும். மரணத்தை ஒழிக்க உன்னால் முடியாது, ஆனால் அதை உன்னத வாழ்வாக நீ உருமாற்றலாம். – […]
August 17, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

உன் கண்களைத் திற, உண்மையில் உலகம் எத்தகையது, கடவுள் எத்தகையவர் என்பதைக் காண்; பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. – ஸ்ரீ அரவிந்தர்